Home Lifestyle ‘ஊ சொல்றியா மாமா’: சீருடை…கடமை நேரம்; வவுனியா வைத்தியசாலைக்குள் உருவான ரிக்ரொக் சமந்தா!

‘ஊ சொல்றியா மாமா’: சீருடை…கடமை நேரம்; வவுனியா வைத்தியசாலைக்குள் உருவான ரிக்ரொக் சமந்தா!

23

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் சுகாதார பரிசாரகர் ஒருவரின் ரிக்ரொக் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இன்றைய திகதியில் இளவயதினர் பலர் ரிக்ரொக் வீடியோவிற்கு அடிமையாகியுள்ளனர். ஆடல், பாடல், நடிப்பு என பலவிதமான வீடியோக்களை அவர்கள் பதிவிடுவது வழக்கம். இந்த வகையான இளசுகளிற்கே ‘டப்’ கொடுத்து, வீடியோ வெளியிட்டுள்ளார் வவுனியா வைத்தியசாலையின் சுகாதார பரிசாரகரான பெண்ணொருவர்.

அவர் வெளியிட்ட வீடியோக்களில் பல வைத்தியசாலைக்குள்ளேயே பதிவாகியுள்ளது. கடமை நேரத்தில், சீருடையுடனும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அண்மையில் வெளியான ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பாடல்களிற்கும் அவர் வைத்தியசாலைக்குள் நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோக்கள் வைரலானாலும், தற்போது சர்ச்சையும் தோன்றியுள்ளது. வைத்தியசாலை பணியாளர் ஒருவர், வைத்தியசாலைக்குள், கடமை நேரத்தில் இப்படி ரிக்ரொக் வீடியோக்கள் பதிவு செய்து வெளியிடலாமா என பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.