Home Cinema உணமையிலேயே விஜய் படத்தை விட அஜித் படம்தான் அதிக வசூல் செய்தது!! பிரபலம் கூறிய உண்மை...

உணமையிலேயே விஜய் படத்தை விட அஜித் படம்தான் அதிக வசூல் செய்தது!! பிரபலம் கூறிய உண்மை இதோ !!

17

பேரரசு இயக்கத்தில் திருப்பாச்சி திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது விஜய், த்ரிஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2004-ல் வெளியான கில்லி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

அதேபோல் பேரரசுவின் இயக்கத்தில் திருப்பதி திரைப்படம் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று வெளிவந்தது. இதில் அஜித்குமார் கதாநாயகனாகவும் சதா கதாநாயகியாகவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த இரு படங்களையும் அடுத்தடுத்து இயக்கிய பேரரசு அவர்கள் கூறுகையில்,நடிகர் விஜய் படம் என்றால் குழந்தைகள் அதிகம் வருவதால் சண்டை காட்சிகளில் அதிகம் கவனம் செலுத்தியதாகவும் ,ஹீரோவின் கோவம் பார்வையாளருக்கு புரிந்தால் போதும் என கூறினார்.

மேலும் விஜய் வைத்து 2005ல் சிவகாசி படம் இயக்கம் போதும் தன்னை ரசிகர்களில் ஒருவராக நினைத்து தான் இயக்கியதாகவும் கூறினார். விஜய்படத்திற்கு ரசிகர்கள் குடும்பத்துடன் வருவதால் சண்டை காட்சிகள் வன்முறையாக அமைய கூடாது என நினைத்தாராம்.

மேலும் விஜய் நடித்த திருப்பாச்சி ,சிவகாசி படங்களை ஒப்பிடும் போது திருப்பதி வெற்றி படம் என்றும் அதன் கலெக்சன் அதற்கு முன் திரைக்கு வந்த 5 வருட படங்களை காட்டிலும் அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் திருப்பதி படம் 100 நாளுக்கு மேல் ஓடியது என கூறினார்.

இப்படி இருக்கையில் திருப்பாச்சி படத்தையும் திருப்பதி படத்தையும் ஒப்பிடுகையில் விஜயின் திருப்பாச்சி படம் வசூல் சாதனை படைத்தது.இருப்பினும் பேரரசு அவர்கள், விஜய்யின் திருப்பாச்சி படத்தை விட அஜித்தின் திருப்பதி படம் முதலில் வந்தால் அதுவும் சாதனை படைத்திருக்கும் என கூறினார்