Home Local news உக்கிரமடையும் போராட்டகளம்!! 33 பேர் வைத்தியசாலையில்!! நாலாபுறமும் கொழும்பை சுத்தி வளைக்கும் மக்கள்: திணறும் இராணுவம்

உக்கிரமடையும் போராட்டகளம்!! 33 பேர் வைத்தியசாலையில்!! நாலாபுறமும் கொழும்பை சுத்தி வளைக்கும் மக்கள்: திணறும் இராணுவம்

27

ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களோபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காயமடைந்தோரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 33 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொழும்பு – காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை அகற்றி அரச தலைவர் மாளிகை நோக்கிச் செல்ல முற்பட்ட போது, ​​காவல்துறையினர், அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

அத்தோடு, கோட்டாபயவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு, விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஆர்ப்பாட்டக் களத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, அரச தலைவர் கோட்டாபயவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டில் சகல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் படையெடுப்பதால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்பாட்டகாரர்கள் பல தடைகளை மீறி அரச தலைவர் மாளிகையின் பிரதான வாயிலை நெருங்கிவிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் கொழும்பின் பல இடங்களிலும் உள்ள வீதிகளில் வீதி தடைகளை ஏற்படுத்தி காவல்துறையினர் போராட்டத்திற்கு வரும் மக்களை தடுத்த வண்ணம் உள்ளனர்.

இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர் என்றும் பலத்த பாதுகாப்பிற்காக முப்படையினர் வரவழைக்கபட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

உக்கிரமடையும் போராட்டகளம்!! 33 பேர் வைத்தியசாலையில்!! நாலாபுறமும் கொழும்பை சுத்தி வளைக்கும் மக்கள்: திணறும் இராணுவம் உக்கிரமடையும் போராட்டகளம்!! 33 பேர் வைத்தியசாலையில்!! நாலாபுறமும் கொழும்பை சுத்தி வளைக்கும் மக்கள்: திணறும் இராணுவம் உக்கிரமடையும் போராட்டகளம்!! 33 பேர் வைத்தியசாலையில்!! நாலாபுறமும் கொழும்பை சுத்தி வளைக்கும் மக்கள்: திணறும் இராணுவம் உக்கிரமடையும் போராட்டகளம்!! 33 பேர் வைத்தியசாலையில்!! நாலாபுறமும் கொழும்பை சுத்தி வளைக்கும் மக்கள்: திணறும் இராணுவம் உக்கிரமடையும் போராட்டகளம்!! 33 பேர் வைத்தியசாலையில்!! நாலாபுறமும் கொழும்பை சுத்தி வளைக்கும் மக்கள்: திணறும் இராணுவம்