பொதுவாக சினிமா பிரபலங்களுக்கு விவாகரத்து என்பது ஒரு விளையாட்டு பொருள் மாதிரி மாத்தி மாத்தி திருமணம் செய்துகொள்பது விளையாட்டாகிவிட்டது இந்நிலையில் கடந்த ஒருவாரமாக என்னதான் இயக்குனர் பாலாவின் விவாகரத்து செய்தி ஹாட் டாபிக் என்றே கூறலாம் .
கடந்த சில நாட்களாக அவருடைய விவாகரத்து பற்றி தான் ஊடகங்களில் பேச்சாக கிடக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைகளை மையமாகக் கொண்டிருக்கும்.
மேலும் பல நடிகர், நடிகைகள் விருதுகளை வாங்குவதற்கு அவர் காரணமாக இருந்திருக்கிறார். அந்த அளவுக்கு தனது தனித்துவமான இயக்கத்தின் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த திரைப்படம் நான் கடவுள்.
இதில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடித்து இருப்பார். அவருக்கு இணையாக இலங்கையிலிருந்து வந்த அந்த சிங்கள பெண் நாயகியாக நடித்து இருப்பார். இவர்தான் தற்போது பாலாவின் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால் அந்த திரைப்படம் எடுக்கும் போது அவருக்கும், பாலாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி பயங்கரமாக இருந்ததாம். அதுமட்டுமல்லாமல் அந்த பட வெளியீட்டின் போது ஒரு விழாவில் மேடையில் பாலாவை பார்த்த அந்த நடிகையை பொது இடம் என்று கூட பார்க்காமல் ஓடி வந்து பாலாவின் கன்னத்தில் பச்சக் என்று ஒரு முத்தத்தை கொடுத்திருக்கிறார்.
இதை அங்கு இருந்த ஒட்டு மொத்த பிரபலங்களும் அதிர்ச்சியில் பார்த்திருக்கின்றனர். அதோடு இயக்குனர் பாலாவும் அந்த நடிகையின் கன்னத்தில் ஒரு அழுத்தமான முத்தத்தை வைத்திருக்கிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்த சமயத்தில் பாலாவுக்கு திருமணமாகி சில வருடங்கள் தான் ஆகியிருந்தது. இதனால் இந்த சம்பவம் பாலாவின் மனைவி முத்து மலரை மிகவும் பாதித்திருக்கிறது. அதிலிருந்து அவர்கள் இருவருக்கும் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் அது சரியாகாமல் போகவே தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்திருக்கின்றனர். ஆக பாலாவின் திருமண வாழ்க்கையில் இவ்வளவு பெரிய புயல் வீச அந்த இலங்கை நடிகை தான் காரணம் என்று தற்போது பலரும் கூறி வருகின்றனர்.
இவர்கள் பிரிவது அவர் அவர்களின் விருப்பம் என்றாலும் அதனால் அந்த குழந்தைகளின் வாழ்க்கையை பற்றிய சிந்தனை இருந்தால் அவர்கள் இத்தகைய முடிவுக்கு செல்ல மாட்டரகள் என்பதே மக்களின் கருத்து …