Home Local news இரண்டு கப்பல்களில் வெளியேறியவர்கள் யார்? 54 ரயில்கள் கொழும்பை வந்தடைந்தன

இரண்டு கப்பல்களில் வெளியேறியவர்கள் யார்? 54 ரயில்கள் கொழும்பை வந்தடைந்தன

13

தற்போது கொழும்பு துறைமுகத்திலிருந்து இரண்டு கப்பல்கள் முக்கியமான சிலருடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடற்படையினருக்கு சொந்தமான கஜபாகு, சுதுவெல்ல ஆகிய இரண்டு கப்பல்கள் அவசரமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து பொதிகளுடன் புறப்பட்டுள்ளன.

54 ரயில்கள் கொழும்பை வந்தடைந்தன

வெளி மாவட்டங்களிலிருந்து இதுவரை 54 ரயில்கள் கொழும்பு கோட்டையை வந்தடைந்துள்ளன.

எனினும் தற்போதும் பல பிரதான ரயில் நிலையங்களில் கூடியிருக்கும் மக்கள், கொழும்புக்கு வருவதற்காக ரயில் நிலையங்களில் அமைதியின்மையில் ஈடுபட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

கோட்டாவை நீச்சல் தடாகத்தில் தேடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவை தேடியலைந்தனர். அவர் எங்குமே கிடைக்கவில்லை.

இதனையடுத்து, அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் நீச்சல் அடித்துள்ளனர்.

இரண்டு கப்பல்களில் வெளியேறியவர்கள் யார்? 54 ரயில்கள் கொழும்பை வந்தடைந்தன இரண்டு கப்பல்களில் வெளியேறியவர்கள் யார்? 54 ரயில்கள் கொழும்பை வந்தடைந்தன