தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவரது இசையில் கடைசியாக சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகியுள்ளது.
இதுவரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார், அதற்கு அவருக்கு எத்தனை ஸ்பெஷலான பரிசு கிடைத்தது தெரியவில்லை. அண்ணாத்த படத்தின் சூப்பரான இசைக்காக ரஜினியிடம் இருந்து அன்பு பரிசு எல்லாம் அவருக்கு கிடைத்தது.
இந்த தகவலை கூட டி.இமான் கூறியிருந்தார்.2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவருடன் இமானுக்கு திருமணம் நடந்திருந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளார்கள்.
ஆனால் இருவரும் இப்போது சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். எனவே கடந்த சில நாட்களாக டி.இமானின் மறுமணம் குறித்து நிறைய பேச்சுகள் அடிபடுகின்றன.
— D.IMMAN (@immancomposer) December 29, 2021
விவாகரத்து மிகப்பெரிய விஷயம், எப்போது ஆண் மீதுதான் குற்றம் சொல்வார்கள். ஆனார் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் இருக்கும். நான் என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்க கூடாது என விரும்பினேன்.
ஆனால் நடந்துவிட்டது, எனது குழந்தைகளை என் மூச்சு இருக்கும் வரை விடமாட்டேன். எனது முன்னாள் மனைவி நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும், அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் வாழட்டும் என கூறியுள்ளார்.