Home Astology இன்றைய ராசி பலன் – 17.01.2022

இன்றைய ராசி பலன் – 17.01.2022

11

பிலவ வருடம் தை 4 ஆம் தேதி ஜனவரி 17, 2022 திங்கட்க்கிழமை, பவுர்ணமி மறுநாள் விடிகாலை 05.18 மணிவரை அதன் பின் பிரதமைத் திதி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 04.37 மணிவரை அதன் பின் பூசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பெரிய அளவில் வாக்கு கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று எந்த காரியத்தை செய்தாலும் சிறுதடை ஏற்பட்டு பின் நல்லது நடக்கும். சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும். சின்னச் சின்ன மனக்குழப்பம் ஏற்படும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணகளால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் குடும்பத்தில் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். முன்கோபத்தை குறைப்பது நல்லது.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் சற்று குழப்பமாக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். பண வரவு அதிகரிப்பால் கடன் பிரச்சினைகள் தீரும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள் மன நிம்மதி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க நல்ல நாளாகும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுக்களால் உற்சாகம் அடைவீர்கள்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். பண வரவு அதிகரித்தாலும் திடீர் விரைய செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும்.தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.