Home Astology இன்றைய ராசி பலன் – 16.01.2022

இன்றைய ராசி பலன் – 16.01.2022

17

பிலவ வருடம் தை 2 ஆம் தேதி ஜனவரி 15, 2022 சனிக்கிழமை. திரயோதசி இரவு 12.57 மணிவரை அதன் பின் சதுர்த்தசி, மிருகஷீரிடம் இரவு 11.21 மணிவரை அதன் பின் திருவாதிரை. சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலையில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள். கடன் பிரச்சினை தீரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும், செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வியாபாரத்தில் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வங்கியில் சேமிப்பு உயரும். இன்று உங்களுக்கு உடல்நிலையில் மந்தமாக இருப்பீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று கடினமான காரியத்தை கூட லேசாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபசெய்திகள் தேடி வரும். குதூகலமாக இருப்பீர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு நண்பர்கள் தேடி வருவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பணவிரையம் ஏற்படும். உங்களுக்கு பணப்புழக்கம் குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் சிக்கனமாக செலவு செய்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக நல்ல செய்திகள் தேடி வரும் வீட்டிற்குள் ஓய்வெடுங்கள் நன்மைகள் நடைபெறும். பணப்பிரச்சினை குறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் குறையும். சிக்கனமாக செயல்படுங்கள் செலவு கட்டுக்குள் வரும். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வேலையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். இன்றைக்கு சுப காரியங்கள் எதுவும் செய்ய வேண்டாம். உங்களுடைய பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. செய்யும் செயல்களில் கவனம் தேவை. இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்பட வேண்டாம். வண்டி வாகனங்களில் கவனம் தேவை.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையே நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். திருமண சுப காரியங்கள் தொடர்பாக இன்று பேசலாம். வியாபாரத்தில் லாபமும் வருமானமும் பெருகும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு எதிர்பாராத பண வரவு எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு கடன் உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சி குறையும். ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களின் உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்
சந்திரன் இன்று ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்றைய தினம் உங்களுக்கு சில பிரச்சினைகள் வரலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.