Home Astology இன்றைய ராசி பலன் – 14.01.2022

இன்றைய ராசி பலன் – 14.01.2022

14

பிலவ வருடம் தை 1 ஆம் தேதி ஜனவரி 14, 2022 வெள்ளிக்கிழமை. துவாதசி இரவு 10.19 மணிவரை அதன் பின் திரயோதசி. ரோகிணி இரவு 08.17 மணிவரை அதன் பின் மிருகஷீரிடம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செய்வது நல்லது.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் தேடி வரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதுவரை எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை ஏற்படும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொன் பொருள் சேரும். இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். தொழில் ரீதியாக பயணங்கள் மூலம் வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் வீடு தேடி வரும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய காரியங்களில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது உத்தமம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வேலையில் கவனம் தேவை. வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும் சேமிப்பு உயரும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் பண வரவால் கடன் பிரச்சினைகள் நீங்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு நன்றாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வரவு வரும் திடீர் செலவுகளும் வரும். சிக்கனமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோக ரீதியான முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். பண வரவு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும்.