Home Astology இன்றைய ராசி பலன் – 13.01.2022

இன்றைய ராசி பலன் – 13.01.2022

21

பிலவ வருடம் மார்கழி 29 ஆம் தேதி ஜனவரி 13, 2022 வியாழக்கிழமை,ஏகாதசி இரவு 07.33 மணிவரை அதன் பின் துவாதசி. கார்த்திகை மாலை 05.07 மணிவரை அதன் பின் ரோகிணி. சந்திரன் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் தேடி வரும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

ரிஷபம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் முலம் சுபசெய்திகள் கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பண வரவும் செலவும் அதிகரிக்கும். கடன்கள் சற்று குறையும். செயல்களில் நிதானம் தேவை.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் நன்மைகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்றைய தினம் குடும்பத்தில் வரவிற்கேற்ப செலவுகள் இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் நிம்மதியை தரும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் அவர்களின் பொறுப்பறிந்து செயல்படுவர். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் பலனைத் தரும். குடும்பத்தில் திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் உண்டாகும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள். வீட்டில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக கூட்டாளிகளுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் கடினமான காரியங்களை கூட எளிதில் முடித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.