Home Astology இன்றைய ராசி பலன் – 11.01.2021

இன்றைய ராசி பலன் – 11.01.2021

13

பிலவ வருடம் மார்கழி 27 ஆம் தேதி ஜனவரி 11, 2022 செவ்வாய்கிழமை. நவமி பகல் 02.22 மணிவரை அதன் பின் தசமி. அசுவினி பகல் 02.22 மணிவரை அதன் பின் பரணி.சந்திரன் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, இன்றைய தினம் சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். செயல்களில் நிதானம் தேவை. சவால்களை சந்தித்து வெற்றியடைவீர்கள். பணம் நகை விவகாரங்களில் கவனம் தேவை. கோபத்தை விட்டு பொறுமையை கடைபிடிக்கவும். வேலை செய்யும் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் வீண் விவாதம் தவிர்க்கவும். வெளியாட்களிடம் குடும்ப அந்தரங்க விசயங்கள் தொடர்பாக பேச வேண்டாம். சந்திரன் சஞ்சாரத்தினால் ஏற்படும் சங்கடங்கள் தீர பால் சாப்பிட்டு விட்டு வேலையை தொடருங்கள்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு திடீர் விரைய செலவுகள் வரும். மனதில் பயம் இருந்தாலும் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். திடீர் பண வரவு வரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் இன்றைக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமைந்துள்ளது.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, புத்திசாலித்தனத்தோடு எதையும் எதிர்கொள்வீர்கள். மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் வாழ்க்கையை எதிர்கொள்வீர்கள். லாப ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்வதால் பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். ஷேர் மார்க்கெட் முதலீடுகளால் லாபம் வரும். தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும் லாபம் பெருகும். தம்பதியரிடைய நெருக்கம் கூடும்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இன்றைய தினம் சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வீடு மனை வாங்கும் விசயமாக பேசலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்றைய தினம் முன்னேற்றகரமான நாளாக அமைந்துள்ளது.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சுமை கூடும். செயல்களில் நிதானம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உணவு விசயங்களில் கவனம் தேவை. வாகன பயணங்களில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து போட்டி மாட்டிக்கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திரன் பார்வை கிடைக்கிறது. சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். சவால்களை சந்தோஷமாக எதிர்கொள்வீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும் மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இன்றைய தினம் ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் வெற்றிகள் தேடி வரும். பண வரவு அதிகரிக்கும், திடீர் அதிர்ஷ்டமும் வியாபாரத்தல் லாபம் தேடி வரும். இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும் நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, பலசாலியாக உள்ள நீங்கள் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள். கடன் பிரச்சினைகளால் மன அமைதி குறையும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும் அளவிற்கு பண வரவு வரும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை ஏற்படும். இன்றைய தினம் தடைகள் விலகி வெற்றி கிடைக்கும் நாளாக அமைந்துள்ளது.

மகரம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே நீங்கள் பண்பாளர்கள். தைரியம் தன்னம்பிக்கை கூடும். வியாபாரத்தில் லாபம் வரும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன்கள் குறையும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கும்பம்
சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே மூன்றாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்வதால் வெற்றிகள் கைகூடி வரும். இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். கோபமான பேச்சுக்களை தவிர்த்து பொறுமையை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் லாபம் வரும். வெற்றிகள் நிறைந்த நாளாக அமைந்துள்ளது.

மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்கள் நீங்கள். உற்சாகமாக இருப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று உங்களுக்கு எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். இன்றைய தினம் வெற்றிகரமான நாளாக அமைந்துள்ளது.