Home today Astrology இன்றைய ராசிபலன் – 09/06/2022

இன்றைய ராசிபலன் – 09/06/2022

12

இன்றைய ராசிபலன்

மேஷம்:

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்:

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர் கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்

கடகம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அழகும் இளமையும் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். உற்சாகமான நாள்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். செய்நன்றி மறந்த மனிதர்களின் நினைத்து வருந்து வீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்காதீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.

துலாம்

திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர் நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச் சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்:

சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். புகழ், கௌரவம், கூடும் நாள்.

தனுசு

சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளை கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார் கள். சாதிக்கும் நாள்.

மகரம்

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும் . உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி கள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். விட்டதைப் பிடிக்கும் நாள்.

கும்பம்:

சந்திராஷ்டமம் இருப் பதால் முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக் காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். போராட்டமான நாள்.

மீனம்:

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமைபிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடி வடையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். சாதுர்யமான நாள்.