Home Cinema இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனின் நடித்த சாணி காயிதம் படத்தின் டீஸர்...

இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனின் நடித்த சாணி காயிதம் படத்தின் டீஸர் இதோ !!

7

சானி காயிதம் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.ராக்கி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் சானி காயிதம். இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அருண். இது செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் படம். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 80களின் பிற்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட க்ரைம் நாடகமாகும்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், படம் குறித்த புகைப்படங்களையும் அப்டேட்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இப்படத்தில் செல்வராகவனின் தங்கையாக கீர்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் தமிழ் டீசரைப் பகிர்ந்துள்ள நடிகர் செல்வராகவன், படம் மே 6ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படம் சென்சார் போர்டு மூலம் ஏ தரப்படுத்தப்பட்டுள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன், 2011 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். அவர் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரிக்கு உதவியவர், சுதா கொங்ராவின் இயக்கத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார்.