வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்
குறித்த சந்தேக நபர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
இதே வேளை கடந்த 29.04.2022 அன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று ஆவா குழு என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்தது .
இந்த சம்பவத்தினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கேரத் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு துண்டுபிரசுரத்தினை வீதிகளில் போட்டுச்சென்றவர்களின் உந்துருளிகள் சி.சி.ரிவியில் இனம் காணப்பட்டு அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்த நிலையில் 01.05.2022 இன்று ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு வேணாவில்,10ஆம் வட்டாரம்,சிவநகர் பகுதிகளை சேர்ந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது