Home Cinema ஆடிய ஆட்டம் என்ன ? அதல பாதளத்திற்கு சென்ற நடிகர் விஜய் மற்றும் நெல்சனின் பரிதாப...

ஆடிய ஆட்டம் என்ன ? அதல பாதளத்திற்கு சென்ற நடிகர் விஜய் மற்றும் நெல்சனின் பரிதாப நிலை !!

41

தளபதி விஜய்யின் பீஸ்ட் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், பீஸ்ட் தியேட்டர்களுக்கு கூட்டத்தை இழுத்து வருகிறது.

Vijay

நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது வெளியாகி திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர் தயாரித்தது. நெல்சன் திலிப்குமார் இயக்கியிருந்தார். நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான கோலமாவு கோகிலா, மற்றும் டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது, இதில் டாக்டர் படம் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் மறு வாழ்வு கொடுத்த படம் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு வசூலை அள்ளி குவித்த படம் டாக்டர்.

Beast

நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான டாக்டர் படம் மிக பெரிய வெற்றி பெற்று இருந்ததால், அவருடைய அடுத்த இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் மீது சினிமா ரசிர்கர்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் பார்த்த விஜய் ரசிகர்களுக்கே பீஸ்ட் பிடிக்கவில்லை. முதல் நாளே பீஸ்ட் மண்ணை கவ்வி இரண்டாம் நாள் பீஸ்ட் படம் வெளியிட்ட பல திரையரங்குகள் படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கியது.

Beast

விஜய் சினிமா கேரியரில் சுறா, பைரவா போன்ற மோசமான படங்கள் வரிசையில் இடம் பிடித்தது பீஸ்ட். இந்த படம் தோல்விக்கு இயக்குனர் நெல்சன் தான் காரணம் என விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த படம் மண்ணை கவ்வியதற்கு நடிகர் விஜய் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. முன்னனி இயக்குனர்கள் நடிக்கும் படங்களில் கதை விவகாரங்களில் தயாரிப்பு நிறுவனம் மூக்கை நுழைக்காது என்று கூறப்படுகிறது.

Beast Vijay Movie

அந்த வகையில், பீஸ்ட் படத்தின் கதை, இயக்குனர் என அனைத்தும் விஜய் தான் முடிவு செய்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் விஜய்யிடம் கால் சீட் மட்டும் வாங்கியுள்ளது. விஜய் கதையில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது, இது நெல்சன் படமே கிடையாது. விஜய் படம் என்றும் சொல்லும் அளவுக்கு விஜய்யின் தலையீடு இந்த படத்தில் இருந்துள்ளது. அதனால் தான் இந்த படம் மிக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என கூறப்படுகிறது.

Beast

இந்நிலையில் பீஸ்ட் வெளியான பின்பு எதிர்மறை விமர்சனம் அதிகமாக வந்துள்ளது, மேலும் நெல்சன் சினிமா வாழ்க்கை இத்துடன் முடித்துவிடுமோ என்கிற பரபரப்பும் நிலவி வரும் சூழலில், நெல்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் விஜய் அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். கதையில் மாற்றம் செய்தது என் மீது தான் தவறு. நீங்கள் கூறியது போன்று உங்கள் ஸ்டைலில் எந்த படத்தை எடுத்திருக்க வேண்டும்.
Beast Vijay

கவலை படாதீங்க நெல்சன். சினிமாவில் இது போன்ற வீழ்ச்சிகள் வருவது சகஜம் தான். நம்ம கண்டிப்பாக மீண்டும் ஒரு படம் சேர்ந்து பண்ணுவோம் என தன்னால் வீழ்ச்சி அடைந்த நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து தருவதாக விஜய் தொலைபேசியில் நெல்சனிடம் ஆறுதல் தரும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் ஆறுதலுக்காக தான் விஜய் சொன்னாரா.? அல்லது உண்மையிலே சொன்னாரா.? என்பதை உறுதியாக நம்ப முடியாது என சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிட்டத்தக்கது.

Thalapathy 66

மேலும், தற்போது கர்நாடகாவில் ஒரே நாளில் பீஸ்ட் படத்தின் 35க்கும் மேற்பட்ட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம், நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் பீஸ்ட் படம், மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது என திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் அடுத்ததாக விஜய் அறிவித்துள்ளார், மேலும் சில வாரங்களுக்கு முன்பு முஹூர்த்த பூஜையுடன் படம் தொடங்கப்பட்டது. படத்தின் சில காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன, மேலும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் முக்கிய ஷெட்யூல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் FEFSI உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் படத்தின் படப்பிடிப்பு இடத்தை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு மாற்றுமாறு தயாரிப்பாளர்களிடம் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.