அம்பாறை − தமன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்றும் லொறி ஒன்றும் மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர்களென்றும், ஒன்றரை மாத ஆண் குழந்தை மற்றும் அவருடைய தந்தை என ஒரே குடும்பத்தைச் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.