நியுயோர்க்கின்;Buffalo நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பத்துபேர்கொல்லப்பட்டுள்ள அதேவேளை இது இனரீதியிலான வன்முறை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராணுவ உபகரணங்களுடன் காணப்பட்ட 18 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நகரின் மும்முரமான வணிகவளாகத்திற்குள் நுழைந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
பலமணிநேரம் பிரயாணம் செய்து கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழும் நகரிற்குள் நுழைந்த சந்தேக நபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளப்பட்டுள்ளார் – சுடப்பட்ட 13 பேரில் அதிகமானவர்கள் கறுப்பினத்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தின் போது சந்தேகநபர் இனவெறி வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் வாகனத்திலிருந்து இறங்கினார் அவர் ஆயுதங்களுடன் காணப்பட்டார் அவர் தனது துப்பாக்கி பிரயோகத்தை நேரடியாக ஒளிபரப்பினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் அந்த நபர் துப்பாக்கியை கையளித்துவிட்டு சரணடைந்துள்ளார்.