Home Astology அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 18.02.2022

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 18.02.2022

42

மேஷம்:
அசுவினி: முன்னேறும் வழிகளை கண்டறிந்து அதை செயல்படுத்துவீர்கள்.
பரணி: நல்ல உணவுகள் உண்ணும் வாய்ப்பு கிடைப்பதால் மகிழ்வீர்கள்.
கார்த்திகை 1: பழைய முயற்சி ஒன்றிற்கு இப்போது வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நீங்கள் மிகவும் ரசிக்கும் விஷயங்களை இன்று அனுபவிப்பீர்கள்.
ரோகிணி: குழந்தைகளின் போக்கில் அக்கறை செலுத்துவது நல்லது.
மிருகசீரிடம் 1,2: பணியாளர்கள் எடுத்த முயற்சியில் வெற்றி காண்பர்.

மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பிறர் நலனில் அக்கறை காட்டுவதால் அவர்கள் நன்றி பாராட்டுவர்.
திருவாதிரை: நீங்கள் திட்டமிட்ட விஷயங்கள் தீர்மானித்தபடியே நடைபெறும்.
புனர்பூசம் 1,2,3: முந்தைய முயற்சிக்கான வெற்றியை இன்று சுவைப்பீர்கள்.

கடகம்:
புனர்பூசம் 4: உங்களை விட வயதில் குறைந்தவர்களின் நட்பு கிடைக்கும்.
பூசம்: நண்பர்களின் கூட்டு முயற்சியால் நன்மை ஒன்றைச் செய்வீர்கள்.
ஆயில்யம்: உங்களது உழைப்புக்கு பலன் கிடைக்கும். போட்டியைச் சமாளிப்பீர்கள்.

சிம்மம்:
மகம்: வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகளை இன்று கண்டறிவீர்கள்.
பூரம்: முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்து அவரை நெகிழ வைப்பீர்கள்.
உத்திரம் 1: நியாயமாகச் செயல்பட்டு தீமைகளில் இருந்து தப்புவீர்கள்.

கன்னி:
உத்திரம் 2,3,4: எதிரிகளின் முயற்சிகள் தோற்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
அஸ்தம்: மனம் மகிழும். வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
சித்திரை 1,2: நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று நடைபெறும். நீண்ட நாள் வருத்தம் தீரும்.

துலாம்:
சித்திரை 3,4: நிதி நிலை சிறப்பாக இருக்கும். தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
சுவாதி: மன உறுதி அதிகரிக்கும். வாழ்க்கை வசதிகள் பெருகும்.
விசாகம் 1,2,3: முன்னேற்றத்திற்காக இன்று கூடுதலாக உழைப்பீர்கள்.

விருச்சிகம்:
விசாகம் 4: நிம்மதி அதிகரிக்கும். இன்று மகிழத்தக்க சம்பவம் ஒன்று நிகழும்.
அனுஷம்: நெருங்கிய நண்பர்களின் செயல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும்.
கேட்டை: மனதில் நினைப்பவற்றை யாரிடமும் வெளிப்படையாக பேச வேண்டாம்.

தனுசு:
மூலம்: பிறருக்கு அன்பளிப்பு கொடுத்து மகிழ்வீர்கள். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
பூராடம்: நினைத்த செயலை முடித்து நிம்மதி காண்பீர்கள். பிரச்னை தீரும்.
உத்திராடம் 1: மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி முன்னேற்றம் தரும்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: அவசரப்பட்டுப் படபடப்பாகப் பேசுவதால் பிரச்னைக்கு ஆளாவீர்கள்.
திருவோணம்: யார் மனதையும் புண்படுத்தாதீர்கள். முரட்டுத்தனம் வேண்டாம்.
அவிட்டம் 1,2: அநாவசியக் கோபத்தால் நல்ல நட்பை இழக்க வேண்டாம்.

கும்பம்:
அவிட்டம் 3,4: உங்களது வார்த்தைக்கு சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
சதயம்: நீங்கள் கோபமாக பேசினாலும் அதில் உள்ள நியாயத்தை பிறர் எடுத்துக் கொள்வர்.
பூரட்டாதி 1,2,3: இன்று குதுாகலமும் கொண்டாட்டமும் இருக்கும்.

மீனம்:
பூரட்டாதி 4: சிரமத்தை மறப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
உத்திரட்டாதி: வாழ்வில் முன்னேறுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரேவதி: ஆரோக்கியம் மேம்படும். உறவினரின் ஆலோசனையை ஏற்பீர்கள்.