Home Accident News அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி

49

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் கஹடகஸ்திகிலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் ஹொரவ்பொத்தானை – முக்கறவெவ பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கெப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் உட்பட 8 பேர் காயமடைந்த நிலையில் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கஹடகஸ்திகிலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.