Home Indian news அந்த வீடியோவை காட்டி சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை

அந்த வீடியோவை காட்டி சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை

12

மளிகை கடைக்கு சென்ற சிறுமியை காரில் கடத்தி கொண்டு போய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு அல்லாமல் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு அந்த வீடியோவை அடிக்கடி காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த இரண்டு பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உடன் இருந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோவை காட்டி சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையைச் சேர்ந்த அந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று இருக்கிறார். அப்போது டிரைவராக இருந்த வாலிபர் ஒருவர் அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார் . அப்போது திடீரென்று வந்த காருக்குள் அந்த சிறுமியை தள்ளி அவரும் அந்த வாலிபரின் கூட்டாளியும் கடத்திச் சென்று இருக்கிறார்கள்.

அந்த சிறுமியை மிரட்டி பாலியல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் . இதை வீடியோவாகவும் செல்போனில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோவை சிறுமியிடம் அடிக்கடி காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த சிறுமிக்கு துணிச்சல் வந்து பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார்.

அந்த வீடியோவை காட்டி சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை

பெற்றோர் உடனே போலீசில் புகார் செய்ய , டிரைவர் உள்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த 2017ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவத்தில் வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.

15 பேர் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். விசாரணையின் முடிவில் 3 பேரின் மீதான குற்றம் உண்மை என்று உறுதியானது .

அந்த வீடியோவை காட்டி சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை

இதை அடுத்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், உடனிருந்த கூட்டாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.