Home Local news அதிகரிக்கும் கொரோனா தொற்று: கட்டாயமாக்கப்பட்டுள்ள முகக்கவசம்! வெளியாகியது அறிவித்தல்

அதிகரிக்கும் கொரோனா தொற்று: கட்டாயமாக்கப்பட்டுள்ள முகக்கவசம்! வெளியாகியது அறிவித்தல்

44

இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்களின் போதும் மற்றும் பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையில் முகக்கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.