Home social issues அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளும் பாலியல் வன்புணர்வுகளும்

அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளும் பாலியல் வன்புணர்வுகளும்

25

நேற்று பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன 9 வயது குழந்தை ஆயிஷா அவர்கள் மிக கோரமாக படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்

அதே போன்று சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் வசித்த சிறுமி ஒருவர் உறவினர் ஒருவரால் வன்புணர்வுக்கு உட்பட்டு கருவுற்று இருந்த நிலையில் பெற்றோர்களால் சட்டவிரோத கருக்கலைப்புக்கு உட்படுத்த பட்ட நிலையில் கொல்லப்பட்டு இருந்தார்

சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் – சுழிபுரம் பிரதேசத்தில் சிறுமி றெஜினா அவர்கள் உறவினர்களுக்கு இடையான தனிப்பட்ட முரண்பாடுகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருந்தார்

யாழ் கரைநகர் பாலவோடையில் சிறுமி ஒருவர் 2013ஆம் ஆண்டு இலங்கை கடற்படை அதிகாரிகளால் பாலியல் வல்லுறுவுக்கு உடபடுத்தப்பட்டுக் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு மார் மாதம் 5ஆம் திகதி யாழ் புங்குடுதீவில் மாணவி வித்திய சிவலோகநாதன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்ய்ப்பட்டிருந்தார்.

2016 ஆம் ஆண்டு வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் 14 வயது வயதான மாணவி ஹரிஷ்ணவி என்பவர் அயல் வீட்டை சேர்ந்த ஒருவரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருந்தார்

இன்று பாராளமன்ற உறுப்பினராக இருக்கும் பிள்ளையான் தலைமையிலான குழுவினர் 2009 மார்ச் 11ஆம் திகதி 6 வயது மாணவியான வர்ஜா யூட் றெஜி என்ற சிறுமியை கப்பம் பெறும் நோக்கில் கடத்திச்சென்று படுகொலை செய்தனர்.

அதே போல பிள்ளையான் குழுவினர் மட்டக்களப்பில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 31ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான 8 வயதான தினுசிகா சதீஸ்குமார் என்கிற மாணவியையும் கப்பம் பெறுவதற்காக கடத்தி சென்று படுகொலை செய்து இருந்தனர்

மட்டு-வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவியாக இருந்த 21 வயதேயான தனுஸ்கோடி பிறேமினி. என்கிற பெண்ணை சந்திவெளி இராணுவ முகாமை சேர்ந்த கலீல் என்பவனின் உதவியுடன் வெலிகந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடத்திய பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான், சிந்துஐன், யோகன், புலேந்திரன், குமார், சிரஞசீவி ஆகியோர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர்.

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி என்ற சிறுமி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ. பி. டி. பி அமைப்பை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற நபரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்

அதே போல 2013 ஆம் சட்னு மண்டைதீவில் நான்கு வயது குழந்தையான சுடரினியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ. பி. டி. பி அமைப்பை சேர்ந்தவர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பாடசாலை மாணவன் கபில்நாத் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ. பி. டி. பி அமைப்பை சேர்ந்தவர்களால் கப்பம் பெரும் நோக்கில் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்

தீவக பகுதியான கரம்பொனில் நடந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் மீதான கற்பழிப்பு சம்பவம் ஒன்றுடனும்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ. பி. டி. பி அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்புபட்டு இருந்தனர்

அதே போல மெலிஞ்சிமுனை பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் மீதான கற்பழிப்பு சம்பவத்துடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ. பி. டி. பி அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்புபட்டு இருந்தனர்

இது போதாதென்று தீவக பகுதியான நெடுந்தீவில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் சர்வதேச விபச்சார வலையமைப்பிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ. பி. டி. பி கடத்திய சம்பவங்களை அரசாங்க அதிபராக இருந்த திரு கணேஷ் அவர்களும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்பான
நிறுவனமும் உறுதிப்படுத்தி இருந்தது

சில மாதங்களுக்கு முன்னர் பாராளமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் பதியுதீன் அவர்களின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஹிஷாலினி அவர்கள் தீயில் எரிந்து மரணமடைந்து இருந்தார்

மேற்குறிப்பட்டது போன்று நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் நடந்தேறி இருக்கின்றது

பாலியல் வறட்சி , போதை பாவனை , கப்பம் பெறுதல் , தனிப்பட்ட பகை போன்ற காரணங்களினாலேயே பல சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன

ஆனால் பெருமளவான சம்பவங்களுக்கு நியாயமான விசாரணைகளோ அல்லது நீதியோ இதுவரை கிடைக்க வில்லை .

அதே போல குற்றவாளிகள் பலரும் இதுவரை தண்டிக்க படவில்லை . துயரமான முறையில் குற்றவாளிகள் பலரும் இன்றும் அதிகாரத்தில் இருக்கின்றனர்

இலங்கை சமூகமும் இவ்வாறான கொடூர சம்பவங்களின் போது வெறுமனே சமூக தளங்களில் கொந்தளிப்பதோடு அடங்கி போய் விடுகின்றது

இங்கே சட்டங்களால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியாது என்பதை பலர் புரிந்து கொள்ளுவதே இல்லை

குறிப்பாக சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் மட்டுமே பாதுகாப்பு அளிக்கலாம் என்பதை புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்

அதாவது சட்டங்களை நடைமுறைப்படுத்திவதில் இருக்கும் தயக்கங்களே குற்றவாளிகளை பாதுகாக்கின்றது

இலங்கையில் 5 வயது குழந்தை ஒன்றை மிருசுவில் பகுதியில் திருகி கொன்றார் மிக அரிதாக உயர் நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்ட சுனில் ரத்னாயக்க என்கிற இராணுவ அதிகாரியை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படுகின்றார்

பிரபலமான போதை வியாபாரி துமிந்த சில்வா கொலைவழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட போதும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படுகின்றார்

இது எல்லாம் எவ்வாறு சாத்தியமானது ? சட்டங்களை சரியாகநடைமுறைப்படுத்தி இருந்தால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் எவ்வாறு பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படலாம் ?

அண்மைக்காலங்களில் பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், உரிமைகளை காத்தல் மற்றும், சாதனைகளை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சார்பில் அக்டோபர் 11 ஆம் திகதி , சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த சூழ்நிலையாவது மிக காத்திரமான முறையில் அரசியல் விருப்புகளுக்கு அப்பால் சட்ட்டங்களை கடுமையாக அமுல்படுத்த தயக்கமின்றி முயல வேண்டும்

இதன் மூலம் மட்டுமே அப்பாவி குழந்தைகளை கொடூர கொலையாளிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.