Home Cinema அஜித்தை பற்றி பேச நீ யாருடா வெண்ண !! ப்ளூ சட்டை மாறனை நாறடித்த...

அஜித்தை பற்றி பேச நீ யாருடா வெண்ண !! ப்ளூ சட்டை மாறனை நாறடித்த ஆர் கே சுரேஷ் !!

49

அஜீத் குமாரின் வலிமை திரைப்படம் மூன்றாவது வாரத்தில் திரையிடப்பட்டு, தமிழகம் மற்றும் சர்வதேச நாடுகளில் அணைத்து திரையரங்குகளில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எதற்கும் துணிந்தவர் படம் வந்தபோதிலும் , வலிமை தமிழ்நாட்டில் பல திரைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாவது வாரத்தை நேர்மறையான குறிப்பில் தொடங்கியதாகத் தெரிகிறது. சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய புதிய வெளியீடுகள் இருந்தபோதிலும் திரையரங்கு உரிமையாளர்கள் வலிமையை திரையிட விரும்புகிறார்கள்.

Ajith

இதனிடையே இப்படம் வெளியானதில் இருந்து பலரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது. குறிப்பாக யூடியூப் திரைப்படங்களை விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வலிமை படத்தை விமர்சித்து இருந்தார். வலிமை படத்தை மட்டுமின்றி அஜித் குறித்தும் அவர் மோசமாக விமரித்து இருந்தார்.

இதனிடையே தற்போது பிக் பாஸ் சீசன் 4 பிரபலமான ஆரி சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு பதிலடி கூறும் வகையில் பேசியுள்ளார்.

Vindoh-Latest

அவர் கூறியதாவது ” ப்ளூ சட்டை மாறன் தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும், தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் ஏன்னென்றால் அதுவே உங்களுக்கு திரும்பி வரும். தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தும், உழைப்பால் உயர்ந்தவர் தான்” என பேசியுள்ளார்.

Ak Ajith

இந்நிலையில் ஆர் கே சுரேஷ் அவர்கள் அஜித்தை பற்றி பேச நீ யாருடா என்று ப்ளூ சட்டை மாறனை
ஒருமையில் திட்டிய வீடியோ வைரலாகிவருகிறது இதோ உங்கள் பார்வைக்கு