Home Cinema அஜித்தை சந்தித்தாரா நெல்சன் !! வைரலாகும் தகவல் !!

அஜித்தை சந்தித்தாரா நெல்சன் !! வைரலாகும் தகவல் !!

15

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 169’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் அவர் அஜித்துக்கும் கதை சொல்லி இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அஜீத்தை சந்தித்து நெல்சன் கதை கூறியதாகவும் அந்த கதை அஜீத்துக்கு பிடித்து விட்டதாகவும் விரைவில் நான் இணைந்து இந்த படத்தை பண்ணுவோம் என்று அஜித் நெல்சனுக்கு வாக்குறுதி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனேகமாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை அடுத்து ‘அஜித் 63’ படத்தை நெல்சன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் போல் இதுவும் ஒரு கடத்தல் சம்பந்தப்பட்ட கதைதான் என்றாலும் ஆனால் அதே நேரத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் இல்லாமல் காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த கதை என்றும் கூறப்படுகிறது. விஜய், ரஜினியை அடுத்து அஜித் படத்தை நெல்சன் இயக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.