அக்கரைப்பற்றில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை: சந்தேகநபர் கைது
அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஆண் ஒருவர் கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் சின்னமுகத்துவாரம் – அக்கரைப்பற்று 9 பிரிவைச் சோர்ந்த 33 வயதுடைய குணரட்ணம் குணதாஸா என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொத்துவில் பிரதான வீதியிலுள்ள சென்யோன்ஸ் பாடசாலைக்கு முன்னால் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்டகாலமாக முரண்பாடு இருந்து வந்துள்ள நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு வழக்குகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு பிரதான வீதியில் வைத்து இரு குடும்பங்களுக்கும் இடையில் எற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து கோடாரியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடை நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கோடாரியால் தாக்குதல் மேற்கொண்ட 36 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கோடாரியுடன் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அக்கரைப்பற்றில்